கைது செய்யப்பட்ட மொஹமட் சித்திக்கிற்கு சொந்தமான 2 கிலோகிராம் தங்கம் கண்டுபிடிப்பு
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள மொஹமட் சித்திக்கிற்கு சொந்தமான சுமார் 2 கிலோகிராம் தங்கம் வங்கியொன்றில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வங்கியிலுள்ள இந்த நகையை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
மொஹமட் சித்திக்கின் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேவேளை விசாரணைகளுக்கு தேவையான பல்வேறு ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
வெலே சுதா மற்றும் மொஹமட் சித்திக் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இருவரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்திற்கு புறம்பாக அவர்களின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெலா சுதா எனப்படும் சமந்த குமாரவுடன் மொஹமட் சித்திக் நெருங்கிய தொடர்புகளை பேணிவந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மொஹமட் சித்திக்கிற்கு சொந்தமான 2 கிலோகிராம் தங்கம் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
May 10, 2015
Rating:

No comments:
Post a Comment