அமெரிக்காவில் புகையிரத விபத்து : 7 பேர் பலி
அமெரிக்க பிலடெல்பியா பிராந்தியத்தில் பயணிகள் புகையிரதமொன்று செவ்வாய்க்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 7 பேர் பலியானதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளனர். வாஷிங்டன் நகருக்கும் நியூயோர்க் நகருக்குமிடையில் 240 க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த 188 ஆம் இலக்க புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது அந்த புகையிரதத்தின் 10 பெட்டிகள் குடைசாய்ந்துள்ளன. இந்நிலையில் சரிந்து விழுந்த புகையிரதப் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியா ளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் புகையிரத விபத்து : 7 பேர் பலி
Reviewed by Author
on
May 14, 2015
Rating:

No comments:
Post a Comment