அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது-Photos


புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு வல்லனை பகுதியைச் சேர்ந்த ரவி, செந்தில் மற்றும் சின்னாம்பி ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ரவி என்ற சந்தேகநபர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ், புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாடசாலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு பாழடைந்த காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார்.

யுவதியின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது-Photos Reviewed by NEWMANNAR on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.