சங்கக்கார - மஹேல மோதல்!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பிராந்தி யப் போட்டியில் சசெக்ஸ் பிராந்திய அணிக் காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜயவர்தன விளையாடவு ள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலுள்ள உள்ளூர் அணியொன்றான சசெக்ஸ் பிராந்திய அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்ப ட்டார். இதன்படி அந்த அணிக்காகக் களமிறங்கவுள்ளார்.
ஏற்கனவே இலங்கை அணியின் சகவீரரான குமார் சங்கக்கார சரே பிராந்திய அணி சார்பில் விளையாடி வருகின்றார். இதனால் சங்கக்காரா விளையாடும் அணிக்கு எதிராக ஜயவர்தன விளையாடவுள்ளார்.
இலங்கை அணிக்காகப் பெரும் பங்காற்றிய ஜயவர்தன, 149 டெஸ்ட், 448 ஒருநாள் மற்றும்
55 சர்வதேச 20 -க்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் பல்வேறு வகையான சாதனைக்கு சொந்தக்காரராகவும் உள்ளமை குறிப் பிடத்தக்கது.
சங்கக்கார - மஹேல மோதல்!
Reviewed by Author
on
May 12, 2015
Rating:

No comments:
Post a Comment