அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு தினம் அனுஸ்ரிப்பு-Photos


ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தமிழ் தேசியத் தலைவர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 38 ஆவது நினைவு தினம் தொழிலாளர்கள் தினமான மே - 01 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது.

இன்று (1) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தந்தை செல்வநாயகத்தின் சிலைக்கு முன்பாக குறித்த நினைவு தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.

மன்னார் வர்த்தகர்களின் நிதி உதவியுடன் தந்தை செல்வா அறங்காப்பு நிதியத்தின் தலைவரும்,மன்னார் சமாதான அமைப்பின் தலைவருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் குறித்த நினைவு தினம் அனுஸ்ரிக்கப்பட்டது.

இதன் போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதோடு விசேட உரைகளும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் பரஞ்சோதி,மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதோடு விசேட உரையும் நிகழ்த்தினர்.








மன்னாரில் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு தினம் அனுஸ்ரிப்பு-Photos Reviewed by NEWMANNAR on May 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.