அண்மைய செய்திகள்

recent
-

வருடத்திற்கு 36 ஆயிரம் தடவைகளுக்கு மேல் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களினால் எமது வளங்கள் சூறையாடுகின்றன.என்.எம்.ஆலம்.

வருடத்திற்கு 36 ஆயிரம் தடவைகளுக்கு மேல் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களினால் எமது வளங்கள் சூறையாடப்படுவதாகவும்,இதனை கட்டுப்படுத்த ஜனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும்,மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாசத்தின் தலைவருமான எம்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று(1) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

இந்திய மதுரை உயர் நீதிமன்றில் இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கைது செய்யப்படுவது தொடர்பாக தாக்கல் செய்த பதில் மனுவில் கடந்த வருடத்தில் மாத்திரம் இந்திய படகுகள் 36 ஆயிரம் தடவைகள் அத்து மீறி எல்லை தாண்டி உள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்திய கடல் எல்லையில் மீன் வளம் குறைந்ததால்,தமது மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க தொடங்கினர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை போர் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய மீனவர்கள் தங்கம்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர்.

எந்தெந்த வகையில் மீன் பிடிக்கக்கூடாதோ,அந்த வகையில் மீன்பிடிக்க பயன்படுத்துகின்றனர். இலங்கை மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துகின்றனர்.

இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதால்,அவர்களை இலங்கை கைது செய்கினறது. இந்திய மீனவசங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில்,சர்வதேச எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாதென்றும்,ஆபத்தினால் சிக்கினால் உடனடியாக இந்திய கடற்படைக்குதகவல் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இந்திய கடல் எல்லையில் மீனவர்களை இலங்கை கடற்பi டதாக்கியதாக இது வரை கடலோர காவல்படைக்கு எந்த புகாரும் வரவில்லை.

எல்லை தாண்டும் மீனவர்கள் மீது இந்திய கடலோரகாவல் படை நடவடிக்கை எடுக்கமுடியாது.

எச்சரிக்கை செய்ய மட்டு மேமுடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டியதை சட்டரீதியாக இந்திய மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

மேலும் ஒருவருடத்திற்கு 36 ஆயிரம் தடவைகள் மீனவர் அத்து மீறி உள்ளனர் என்றால்,கடந்த 25 வருடங்களில் எத்தனை ஆயிரம் தடவைகள் இவர்கள் அத்து மீறிதொழில் புரிந்துள்ளனர்.

இதன் மூலம் எத்தனை மில்லியன் ரூபா பெருமதியான கடல் உணவுகள் சூறையாடப்பட்டுள்ளன.

கடல் வழங்கள் எந்தளவுக்கு அழிக்கப்பட்டிருக்கும் என்பதனை தமிழக மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,எமது கடற்பரப்பில் ஒரு நாள் அவர்களும் மறுநாள் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்க அனுமதி பெற்றுத்தருமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கோறிக்கைவிடுப்பது நியாயமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான விடயமாகும்.

இலங்கை அரசின் இராஜ தந்திர ரீதியிலான நடவடிக்கை மற்றும் வடக்கு மீனவர்களால் வலியுருத்தப்பட்டு வரும் எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் தொடர்பான தொடர்ச்சியான கண்டனங்கள் இந்திய மத்திய அரசின் இன்றைய நிலைப்பாட்டுக்கான காரணமாக அமைந்துள்ளது.

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை நியாயமானது என்பதும் ஒரு இறைமையுள்ள நாட்டின் சட்டத்திலான நடவடிக்கை தவறாகாது என்பதை இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது ,வரவேற்க வேண்டிய விடயமாகும்.

கடந்த மாதம் தமிழக தொழிலாளர்கள் சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் எனக்கூறி 20 தொழிலாளர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் ஆந்திர மாநில அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒரே நாட்டுக்குள் எல்லைத்தாண்டி சட்டவிரோத தொழில் புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் எந்த முன் எச்சரிக்கையும் இன்றி சுட்டுக்கொண்டது. முனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதும் இது கண்டனத்திற்கூரியது என்பதும் நாம் வலியுறுத்தும் அதே வேளை இறைமையுள்ள எமது நாட்டுக்கும் தடை செய்யப்பட்ட தொழில் முறை ஊடாக எமது வளங்களை சுரண்டுவதை எமது கடற்படை அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கை எவ்வாறு நியாயபூர்வமாகும் என்பதை இப்போதாவது தமிழக மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் இக்கடலின் ஊடாக தொழில் புரிந்து தனது வறுமையை போக்குபவர்கள் தமிழர்கள் என்பதை தமிழக மீனவர்களும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே,தற்போது தமிழகத்தில் நடை முறையில் உள்ள தொழில் தடைக்காலம் முடிவடைந்து,மீளவும் தொழில் புரிவதற்கு எமது கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இதன் உரிமையாளர்கள் மற்றும் இப்படகுக்கு பொறுப்பாக வரும் படகு ஓட்டுனர் மீது சட்டத்தில் கூறப்பட்ட உச்சதண்டனைகள் வழங்க வேண்டும் என கௌரவ ஜனாதிபதியிடம் வடபகுதி மீகவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை எந்த தயக்கமும் இன்றி சம்மந்தப்பட்ட கடற்படையினர் மற்றும் மீன்பிடி அமைச்சு என்பன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வட பகுதி மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
வருடத்திற்கு 36 ஆயிரம் தடவைகளுக்கு மேல் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களினால் எமது வளங்கள் சூறையாடுகின்றன.என்.எம்.ஆலம். Reviewed by NEWMANNAR on May 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.