அண்மைய செய்திகள்

recent
-

சிறுபோகப் பயிர் செய்கையும் ஏமாற்றம்அடையும் விவசாயிகளும்


தொடர்ந்து சில வருடகாலமாக இயற்கையின் சோதனையால் இன்னல் பட்ட விவசாயிகள் தமது பெரும் போக அறுவடைமுடிவடையாத நிலையிலும் மாவட்ட அரச தீர்மானமானத்திற்கு அமைவாக சிறுபோகத்திற்கான விண்ணப்பம் செலுத்துகின்ற வேளையில் மாவட்டத்தில் ஒரே அரச நிர்வாகத்தில் இயங்கும் கமநல சேவை நிலையங்கள் தமக்கென ஓர் தீர்மானத்தினை மேற்கொண்டு விவசாயிகளை  நாட்கணக்கில் கமநல சேவை நிலையங்களில் காத்து நிற்க வைத்து இன்றுவரை அவர்களுக்கான ஒதுக்கீடுகளை (ஈவு) வழங்காததினால் பல விவசாயிகள் தமது ஆதங்கங்களை வெளியிடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக செம்மண் தீவு  கமநல சேவை நிலையத்தில் விண்ணப்பம் செலுத்திய விவசாயிகள் இதுவரை தமது புலவு ஒதுக்கீட்டினை பெறமுடியாத நிலையில் உள்ளனர். இவ்வருடம் செம்மண்தீவு  கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புலவுகள் சிறுபோகப் பயிர்ச்செய்கைக்குத் திறக்காததினால் அப்பிரதேசத்தில் தமது சொந்தக்காணி உள்ளவர்கள் நானாட்டான மற்றும் ஏனைய கமநல சேவை நிலயத்திற்குட்பட்ட புலவுகளில் பயிர் செய்கைக்கான விண்ணப்பங்கள் செலுத்துவதற்காக செம்மண்தீவு கமநல சேவை நிலையத்தில் தமது காணிகளை உறுதிப்படுத்தித் தருமாறு விண்ணப்பங்களை செலுத்தி நான்கு நாட்களாகியும் இதுவரை செம்மண்தீவு கமநல சேவை நிலைய பிரதேச அலுவலரினால் விண்ணப்பம் உறுதிப்படுத்தப்பட்டு ஏனைய கமநல சேவை நிலையங்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ வினியோகிக்கப்படவில்லை.

குறிப்பாக நானாட்டான் பிரதேசத்தில் வசிப்பவர்களும் நானாட்டான் பிரதேசத்திலும் செம்மண்தீவு பிரதேசத்திலும் தமது சொந்தக்காணிகளை உடையவர்கள் நானாட்டான் கமநல சேவை நிலையத்தில் தமது நானாட்டான் பிரதேசத்தில் உள்ள காணிக்கான சிறுபோக ஈவினை பெற்றுள்ளனர். ஆனால் செம்மண் தீவு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட தமது சொந்தக்காணிக்கான ஈவினைப் பெற்று ஒரே இடத்தில் பயிர் செய்ய முடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் செம்மண்தீவு  கமநல சேவை பிரதேச அலுவலரிடம்  கேட்டபோது தாங்கள் 08.05.2014 இன் பின்னரே முன்னுரிமை அடிப்படையில் ஈவுகள் ஏனைய கமநல சேவை நிலையங்களுக்கு அனுப்புவோம் எனக் குறிப்பிடுகின்றார்  ஆனால் இந்த நடைமுறை மாவட்டத்திலுள்ள ஏனைய கமநல சேவை நிலையங்களில் இல்லை அவர்கள் தமது ஈவுகளை உடனுக்குடன் வழங்குகின்றனர்.

மேலும் செம்மண்தீவு  கமநலசேவை நிலையத்தினால் நானாட்டான் கமநல சேவை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு தொகுதிப் பெயர்ப் பட்டடியலில் இவ்வருடம் பயிர் செய்யும் விவசாயிகளுடைய பெயர்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டு சென்ற வருடம் இரண்டாம் முறை வழங்கப்பட்ட சிறுபோகத்தில் வரட்சியால் பயிர்கள் கருகிய செம்மண்தீவு  பிரதேச விவசாயிகளின் பெயர்களே உள்ளடக்கப்ட்டுள்ளது. இது பொதுக்கூட்டத்தீர்மானத்திற்கு முரணானதாகக் காணப்பட்டதனால் விவசாயிகளும் நானாட்டான் கமநல சேவை அலுவலக பிரதேச அலுவலரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே தயவு செய்து இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகளுக்கு உதவி செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
சிறுபோகப் பயிர் செய்கையும் ஏமாற்றம்அடையும் விவசாயிகளும் Reviewed by NEWMANNAR on May 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.