
இந்து பெளத்த நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்து பெளத்த மாநாடு முதல் தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடாத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்து, பெளத்த தொடர்புகளை வளர்க்கும் நோக்கில் இந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதுடன் இம் மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து 70 தமிழ் பெளத்த பிரதிநிதிகளை பங்கேற்கச் செய்யத் தீர்மானித்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாட லொன்று இடம்பெற்றதுடன் பெளத்த மற்றும் இந்து மதத் தலைவர்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், இந்து மற்றும் பெளத்த மத மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்த சம்மேளனம் சிறந்த அடித்தளமாக அமையும் என்று தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய காஞ்சி மடாதிபதி காஞ்சி பெரியார் ஜெயேந்ர சரஸ்வதி சுவாமிகளையும் இலங்கைக்கு அழைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேற்படி இந்து பெளத்த மாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment