அண்மைய செய்திகள்

recent
-

வாக்காளர் தயாரிப்பு கணிப்பீட்டு பணிகள் நேற்று ஆரம்பம்


2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்பதற்காக கணிப்பீடு நேற்று (15) முதல் ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இது தொடர்பான மாதிரிப்படிவம் நேற்று முதல் கிராம உத்தியோகஸ் தர்களினூடாக சகல வீடுகளுக்கும் விநி யோகிக்கப்பட இருப்பதாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். வாக்காளர் இடாப்பு தயாரிப்பதற்கான மாதிரிப் படிவத்தில் 1996 ஜூன் முதலாம் திகதிக்கும் முன்னர் பிறந்த சகல பிரஜைகளுக்கும் நிரப்பி சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். கணிப்பீட்டுக்கான அதிகாரிகள் பயிற்றப்பட்டுள்ளதோடு ஓகஸ்ட் மாதத்தில் இது தொடர்பான பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமது பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் ஓகஸ்ட் 28ம் திகதிக்கு முன் முறையிடவோ ஆட்சேபனை முன்வைக்கவோ அவகாசம் வழங்கப்பட உள்ளது. ஓகஸ்ட் மாத இறுதியில் 2015ஆம் ஆண்டுக்கான உத்தேச வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் உத வித் தேர்தல் ஆணையாளர் கூறினார்.
வாக்காளர் தயாரிப்பு கணிப்பீட்டு பணிகள் நேற்று ஆரம்பம் Reviewed by Author on May 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.