மனித கருமுளையக் கலங்களை மாற்றி அமைப்பதில் வெற்றி
மனித கரு முளையத்திலுள்ள கலங்களை மாற்றி அமைப்பதில் முதல் தடவையாக தாம் வெற்றி பெற்றுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி சர்ச்சைக்குரிய உயிரியல் தொழில்நுட்பமானது பிறக்கப் போகும் குழந்தைகளை முன்கூட்டியே வடிவமைக்கக் கூடியதாகும். இந்த தொழில்நுட்பத்தை பெற்றோர் தவறாக பயன்படுத்தி குறிப்பிட்ட மரபணுக்களை தமது வாரிசுகளுக்கு கடத்தப்பட தெரிவு செய்ய முயற்சிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் வரலாற்றில் முதல் தடவையாக மனித முளையத்திலுள்ள கலங்களை மாற்றி அமைத்துள்ளதாக குவாங்ஸோவிலுள்ள சன் யத் ஸென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மனித கருமுளையக் கலங்களை மாற்றி அமைப்பதில் வெற்றி
Reviewed by Author
on
May 13, 2015
Rating:

No comments:
Post a Comment