ஆரம்பகால மனிதர்களை விடவும் பண்டைய கற்கருவிகள் கண்டுபிடிப்பு
உலகின் மிகப் பழைமையான கற்கருவிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கென்யாவின் துர்கானா ஏரிக்கரைக்கு கீழ் இருந்து 3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் கண்டுபிடித்த கற்கருவிகளை விடவும் இது 700,000 ஆண்டுகள் பழைமையானது என்றும் அவை ஹோமோ இனத்தின் ஆரம்பகால மனிதர்களை விடவும் முற்காலத்துடையவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஆரம்பகால இனங்களும் அறிவு நுட்பம் கொண்டவையாக இருக்கலாம் என்று இந்த கண்டுபிடிப்பு குறித்த நேச்சர் இதழ் கட்டுரையில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஏரிப்பகுதியில் 2012 ஆம் ஆண்டு முடிவு வரை 149 கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளில் இருக்கும் எரிமலைச்சாம்பல் மற்றும் கனிமங்களை ஆய்வுசெய்ததில் அவை 3.3 மில்லியன் ஆண்டு பழைமையானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கற்காலப் பண்பாடுகளுடன் தொடர்புடைய கற்கருவிகள் வரலாற்றுக்கு முந்தைய காலச் சமுதாயங்களைப் பற்றி ஆய்வு செய்ய உதவுகிறது.
ஆரம்பகால மனிதர்களை விடவும் பண்டைய கற்கருவிகள் கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
May 22, 2015
Rating:
Reviewed by Author
on
May 22, 2015
Rating:

No comments:
Post a Comment