அல் – கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் வெளியீடு
அல் –கொய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன்இ தனது இறுதி காலகட்டத்தில் அமெரிக்கா மீது தாக்குதல்களை நடத்துவதில் தீவிர கவனத்தைச் செலுத்துமாறு தனது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை வலியுறுத்தியிருந்ததாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானிலுள்ள மறைவிடத்தில் பின்லேடன் கொல்லப்பட்ட போது அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு தொகை ஆவணங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பின்லேடன் தனது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அரேபிய மொழியில் எழுதியிருந்த கடிதங்கள், அவரது மனைவியரில் ஒருவருக்கான காதல் கடிதம் மற்றும் தீவிரவாத குழுவில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் என்பன மேற்படி ஆவணங்களில் உள்ளடங்குகின்றன.
அத்துடன் பின்லேடன் ஆங்கில மொழியிலான பொருளாதார மற்றும் இராணுவ விதிகளை உள்ளடக்கிய புத்தகங்களையும் வைத்திருந்துள்ளார்.
அவர் தனது பிரதிநிதியொருவருக்கு எழுதிய கடிதத்தில் "எமது சகோதரர்களிடம் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது கவனத்தை குவிக்கச் சொல்லுங்கள்" என பின்லேடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை வேரோடு சாய்ப்பதே அவர்களது வேலை என அவர் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிகாரிகளால் மொழிபெயர்க்கப்பட்ட கடிதங்கள்இ குறிப்புகள் மற்றும் அல் கொய்தாவின் செயற்பாடுகள் தொடர்பான ஏனைய தகவல்கள் என்பவற்றை உள்ளடக்கி 103 ஆவணங்கள்இ வீடியோ காட்சிகள் என்பன தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
தனது மனைவியர்களில் ஒருவருக்கு பின்லேடன் எழுதியிருந்த வீடியோ கடிதத்தில் ''நீ எனது இதயத்தை அன்பாலும் அழகான ஞாபகங்களாலும் நிரப்பியுள்ளதை அறிவாயா?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
“ நீ என் கண்ணின் அப்பிளாக உள்ளதுடன் நான் இந்த உலகில் பெற்றுள்ள பெறுமதி மிக்க ஒன்றாகவும் விளங்குகிறாய்" என அந்த வீடியோ கடிதத்தில் தெரிவித்துள்ள பின்லேடன், தனது மரணத்திற்குப் பின்னர் அவர் வேறொருவரைத் திருமணம் செய்வதில் தனக்கு மறுப்பு எதுவும் கிடையாது எனவும் ஆனால் உண்மையில் சொர்க்கத்திலும் அவரை மனைவியாக அடையவே தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல் – கொய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் வெளியீடு
Reviewed by Author
on
May 22, 2015
Rating:
Reviewed by Author
on
May 22, 2015
Rating:

No comments:
Post a Comment