பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா பெயரில் வீதி
கொழும்பு ஆனந்த மாவத்தையையும், கெட்டவலமுல்ல ஒழுங்கையையும் இணைக்கும் வீதிக்கு இன்று 19 ஆம் திகதி “பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாவத்தை” எனப் பெயரிடப்படும்.
இது தொடர்பான வைபவம் அமைச்சர் கரு ஜயசூரிய தலைமையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பங்களிப்புடன் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் கோட்பாட்டுக்கு இணங்க, இராணுவத்தை வீரத்துடன் வழி நடத்தியமையைக் கெளரவித்து இந்த பெயர் வீதிக்கு இடப்படுகிறது,
இந்த வீதிப் பகுதியில் இருந்த சட்டவிரோத வீடுகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக கிரேண்ட்பாஸ் பகுதியில் வீடுகள் மக்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை உட்பட பல அரச நிறுவனங்கள் இப்பணியில் பங்கேற்றன.
இன்றைய விழாவில் மேயர் ஏ.ஜே. எம். முஸம்மில் உட்பட பல பிரமுகர்களும் பங்குகொள்வர்.
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா பெயரில் வீதி
Reviewed by Author
on
May 19, 2015
Rating:
Reviewed by Author
on
May 19, 2015
Rating:

No comments:
Post a Comment