பாகிஸ்தான்- சிம்பாப்வே கிரிக்கெட் தொடருக்கு 6.33 கோடி ரூபா செலவு பாதுகாப்பு பணியில் 3000 பொலிஸார்
சிம்பாவேயுடனான கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 6.33 கோடி ரூபாவை செலவு செய்யவுள்ள தாக அறிவித்துள்ளது.
கடந்த 2009இல் பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி வீரர்கள் மீது, பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதன் பின் அங்கு கிரிக்கெட் உட்பட எவ்வித விளையாட்டு போட்டிகளும் நடக்கவில்லை.
பாகிஸ்தான் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு இராச்சியத்தில்; நடந்தன. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் பி.சி.பி.,க்கு தொலைக்காட்சி, ஒளிபரப்பு வருமானம் உட்பட பல்வேறு வகைகளில் ரூ. 760 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஸிம்பாப்வே அணி பாகிஸ் தான் வர சம்மதித்தது. இரு அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் லாகூரில் நடக்க வுள்ளன.
இதில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 3000 பொலிஸார், வான்வெளி கண்காணிப்பு என, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தவிர இத்தொடருக்காக ரூ. 6.33 கோடி வரை பி.சி.பி., செலவு செய்கிறது. இதில் பாதி தொகை சிம்பாப்வே கிரிக்கெட் சபைக்கு கட்டணத் தொகை மற்றும் போக்கு வரத்து செலவுக்கு வழங்குகிறது.
பாகிஸ்தான்- சிம்பாப்வே கிரிக்கெட் தொடருக்கு 6.33 கோடி ரூபா செலவு பாதுகாப்பு பணியில் 3000 பொலிஸார்
Reviewed by Author
on
May 20, 2015
Rating:
Reviewed by Author
on
May 20, 2015
Rating:

No comments:
Post a Comment