
அமைச்சரவையின் உபகுழுவுக்கு நேரடியாக பொறுப்புக் கூறும் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட கொஸ்டாபோ ( ஹிட்லரின் காவற்துறை) தரத்திலான காவற்துறை பிரிவு ஊடாக அரசாங்கம் தனது அரசியல் எதிராளிகளை சிறையில் அடைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வரும் தற்போதைய அரசாங்கம் திறைசேரி முறி ஊடாக நாட்டுக்கு 50 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் உபகுழுவுக்கு நேரடியாக பொறுப்புக் கூறும் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட கொஸ்டாபோ ( ஹிட்லரின் காவற்துறை) தரத்திலான காவற்துறை பிரிவு ஊடாக அரசாங்கம் தனது அரசியல் எதிராளிகளை சிறையில் அடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் கையெழுத்திட்டுள்ளனர்.
வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற சம்பிரதாய வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை ஒன்றில் பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இப்படியான நி்லைமை ஏற்பட்டமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. அரசாங்கத்தின் தார்மீக விரோத நடத்தையை நானும் நேரிடியாக அனுபவித்திருக்கின்றேன் என்பதே இதற்கு காரணம்.
பெருந்தெருக்கள் அமைச்சினால் கடனாக பெற்ற 28 பில்லியன் ரூபா பணத்தை வீதிகளை நிர்மாணிக்க பயன்படுத்தாது நான் எனது ஹெலிக்கொப்டர் பயணங்களுக்கு தானசாலைகளுக்கு பயன்படுத்தியதாக அண்மையில் பிரதமர் ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
எனினும் பிரதமரின் குற்றச்சாட்டை தான் மறுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment