புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை: மீள்பரிசீலனை நடவடிக்கை தொடர்கிறது
புலம்பெயர்ந்தவர்களின் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மீள் பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான குழு இந்தப்பணிகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கம் இந்த தடைப்பட்டியலை தயாரித்து வர்த்தமானிப் படுத்தியிருந்தது.
எனினும் புதிய அரசாங்கம், நல்லிணக்க அடிப்படையில் இதனை மீள்பரிசீலனை செய்ய முன்வந்தது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை 1999ஆம் ஆண்டு நிறைவேற்றிய யோசனைக்கு அமையவே இந்த தடை ஏற்படுத்தப்பட்டது.
எனினும் இந்த தடைப்பட்டியல் வருடந்தோறும் மீளமைக்கப்படுவதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை: மீள்பரிசீலனை நடவடிக்கை தொடர்கிறது
Reviewed by Author
on
June 06, 2015
Rating:
Reviewed by Author
on
June 06, 2015
Rating:

No comments:
Post a Comment