அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பம்


கரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.

கடரையோரப் பிரதேசங்களில் நிலத்தடி நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருப்பதால் அதனை குடிநீராகப் பயன்படுத்த முடியாது மக்கள் சிரமப்படுவதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சுல்பிகர் காதர் தெரிவிக்கிறார்.

மன்னார் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தளம் போன்ற கரையோரத்தை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலத்தடி நீரை குடிநீராகப் பயன்படுத்த முடியாத சூழல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் ஆய்வுகளின் ஊடாக தரமான இடங்களை கண்டறிந்து குளாய் கிணறுகளை அமைக்கவும் பொருத்தமற்ற இடங்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதென நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தலைவர் மேலும் கூறினார்.
மன்னார் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on June 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.