அண்மைய செய்திகள்

recent
-

வாக்காளர் விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு அறிவுறுத்தல்


வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நாட்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

இவ்வருடத்துக்குரிய விண்ணப்பப் படிவங்கள் யாவும் கிராம உத்தியோகத்தர் மற்றும் விசேட கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அனுமானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய தங்களுக்குரிய கிராம உத்தியோகத்தர் அல்லது அந்தப் பகுதிக்கு பொறுப்பான விசேட கணக்கெடுப்பு அதிகாரியிடம் விண்ணப் படிவங்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கூறினார்.

குறித்த விண்ணப்பப்படிவம் கிடைத்தவர்கள் தகவல்களைப் பூர்த்திசெய்து கிராம உத்தியோகத்தர் அல்லது. விசேட கணக்கெடுப்பு அதிகாரியிடம் அதனை கையளிக்குமாறும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தினார்.
வாக்காளர் விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு அறிவுறுத்தல் Reviewed by NEWMANNAR on June 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.