21ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இறுதிப்போட்டிகளில் இலங்கை வீராங்கனைகள்
சீனாவின் வுஹான் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 21ஆவது ஆசிய மெய்வல்லுநர் வல்லவர் போட்டிகளில் இலங்கை பாடாலை மாணவி ருமேஷிக்கா ரட்நாயக்க, பெண்களுக்கான 100 மீற்றர் இறுதி ஓட்டப் போட்டியிலும் சந்திரிகா சுபாஷினி ரத்நாயக்க பெண்களுக்கான 400 மீற்றர் இறுதி ஓட்டப் போட்டியிலும் கலந்து கொள்ள தகுதிபெற்றுள்ளனர்.
கேகாலை புனித ஜோசப் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த ருமேஷிக்கா, நேற்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றார்.
பெண்களுக்கான 400 மீற்றர் முதலாவது தகுதிகாண் ஓட்டப் போட்டியை 54.18 செக்கன்களில் நிறைவு செய்த சந்திரிகா சுபாஷினி, ஒட்டு மொத்த நிலையில் 4ஆம் இடத்தைப் பெற்று நேரடியாக இறுதிப் போட்டியில் ஓட தகுதிபெற்றார். இவருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
21ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இறுதிப்போட்டிகளில் இலங்கை வீராங்கனைகள்
Reviewed by Author
on
June 04, 2015
Rating:
Reviewed by Author
on
June 04, 2015
Rating:

No comments:
Post a Comment