இலங்கை வலைப்பந்தாட்ட அணி தெரிவு
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிக்கான இலங்கை வலைப்பந்தாட்ட
அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வலைபந்தாட்டத் தெரிவுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 12 வீராங்கனைகள் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட குழாத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
நான்கு அனுபவம் வாய்ந்தவர்கள் மாத்திரமே இந்த அணியில் இடம்பெறுகின்றனர். ஏனைய அனைவரும் போதிய அனுபவமற்றவர்களாவர். தெரிவாளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கனைகளைக் கொண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாக பயிற்றுநர் தீப்தி அல்விஸ் தெரிவித்தார்.
இலங்கை வலைப்பந்தாட்டக் குழாமில் திசாலா தாரணி அல்கம, தர்ஷிகா லக்மாலி அபேவிக்ரம, ஹசித்தா லக்மாலி மெண்டிஸ், கே. பி. கே. செமினி அல்விஸ், கயாஞ்சலி அமரவன்ச, திலினி வத்தேகெதர, சுரேக்கா ஷானிகா ஜயசூரிய, கயானி திசாநாயக்க, பி. விராஜி சாமரிக்கா. தயார் நிலை வீராங்கனைகளாக ஜே. கே. கே. ஜயவீரஇ பீ. அஸ்வினி, வேணிஜா பரமலிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை வலைப்பந்தாட்ட அணி தெரிவு
Reviewed by Author
on
June 04, 2015
Rating:
Reviewed by Author
on
June 04, 2015
Rating:

No comments:
Post a Comment