600 கிலோ உலர்ந்த மரமுந்திரிகை திருட்டு : இருவர் கைது

வண்ணாத்திவில்லு காட்டுப்புளியன்குளம் தோட்டம் ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் ஒரு இலட்சத்தி நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான 600 கிலோ உலர்ந்த மரமுந்திரிகை அடங்கிய மூட்டைகள் காணாமல் போயுள்ளதாக அத்தோட்டத்தின் ஊழியர் ஒருவர் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
உலர்ந்த மரமுந்திரிகைகள் அடங்கிய களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மூட்டைகளுள் 11 மூட்டைகள் களஞ்சியசாலையிலிருந்து காணாமல் போயிருந்ததாக குறித்த தோட்ட ஊழியரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது.
இந்த முறைப்பட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அதே தோட்டத்தில் தொழில்புரியும் இருவரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இரவு நேரத்தில் திருட்டுத் தனமாக களஞ்சியசாலையினுள் நுழைந்து அங்கிருந்து 11 மரமுந்திரி அடங்கிய மூட்டைகளைத் திருடி அவற்றை விற்பனை செய்திருப்பமை விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விற்பனை செய்வது தாமதமாகுவதால் மேலும் 239 கிலோ மரமுந்திரிகை அடங்கிய 6 மூட்டைகளை அதேதோட்டத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 27 வயதுடைய திருமணமாகாதவர்கள் எனத்தெரிவித்த வண்ணாத்திவில்லு பொலிஸார் அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
600 கிலோ உலர்ந்த மரமுந்திரிகை திருட்டு : இருவர் கைது
 Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 19, 2015
 
        Rating: 
 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment