முசலி பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு போட்டி - Photos
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு போட்டிகள் கடந்த சனி,ளுயிறு (13,14/06/2015) தினங்களில் முசலி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இப் போட்டியில் அரிப்பு சென்ஜேசப் விளையாட்டு கழகம் பிரதேச மட்ட 'சம்பீயனாக' கழகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பிரதேச மட்ட சம்பீயனாக தெரிவான கொக்குபடையான் சென்ஜேம்ஸ் விளையாட்டு கழகம் தோல்வியினை தழுவிக் கொண்டது.
பிரதம அதிதியாக சிலாவத்துறை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி முரளிதரன் கலந்து கொண்டார்.
பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் இன் நிகழ்வில் கலந்து கொண்ட அணைவரும் என்னுடைய மனமாந்த நன்றிகளையும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
முசலி பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு போட்டி - Photos
Reviewed by NEWMANNAR
on
June 15, 2015
Rating:
No comments:
Post a Comment