உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது
உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது
2015 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 105 ஆவது இடத்தை பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் இம்முறை இலங்கை ஒன்பது இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.
சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும் பொருளாதாரத்திற்கான நிறுவனம், 162 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கையை வருடாந்தம் வெளியிடுகின்றது.
இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது.
உலக சமாதான சுட்டியில் சிரியாவுக்கு இறுதியிடம் கிடைத்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் பூட்டானுக்கு 18 ஆவது இடமும் நேபாளத்திற்கு 62 ஆவது இடமும் பங்களாதேஷுக்கு 84 ஆவது இடமும் இந்தியாவுக்கு 143 ஆவது இடமும் பாகிஸ்தானுக்கு 154 ஆவது இடமும் கிடைத்துள்ளன.
சுட்டியில் ஆப்கானிஸ்தான் 160 ஆவது இடத்தில் உள்ளது.
உலக சமாதான சுட்டியில் இலங்கை 114 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
June 30, 2015
Rating:

No comments:
Post a Comment