பெரிய பண்டிவிருச்சான் கிராம மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்புக்களை ஆரம்பித்து வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்.-Photos
யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பண்டிவிருச்சான் கிராமத்தில் உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பெரிய பண்டிவிருச்சான் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் அவர்களின் நிதி பங்களிப்புடன் மாணவர்களுக்கான இலவச மாலை நேர வகுப்புக்களை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மாலை நேர வகுப்பை வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் நேற்று(29) திங்கட்கிழமை மாலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த கிராமத்தில் உள்ள அரச பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பெரிய பண்டிவிருச்சான் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் வடமாகாண சபை உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தில் உள்ள தரம் 1 முதல் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களை ஒன்றினைத்து அவர்களுக்கு மாலை நேரத்தில் இலவச கல்வியை மேற்கொள்வதோடு மாணவர்களுக்கு ஒழுக்கம் தொடர்பில் கற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாகாண சபை உறுப்பினர் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
-இதே வேளை தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை எடுக்கும் மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு தேவையான கற்றல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
நேற்று(29) திங்கட்கிழமை மாலை இடம் பெற்ற குறித்த மாலை நேர வகுப்புக்களை ஆரம்பிக்கும் ஆரம்ப நிகழ்வில் பெரிய பண்டிவிருச்சான் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது முதற்கட்டமாக கல்வி கற்பித்துக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான 3 மாத கொடுப்பணவுகளை வழங்குவதாகவும்,முதல் மாதத்திற்கான இரு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பணவையும் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார்.
பெரிய பண்டிவிருச்சான் கிராம மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்புக்களை ஆரம்பித்து வைத்தார் வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 30, 2015
Rating:
No comments:
Post a Comment