ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் 15 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் 15 பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் சின்டோல் தண்டா என்ற இடத்தில் சீத்தானி பாய் என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு குழந்தை என பெற்றேடுத்த அவருக்கு 15 குழந்தைகளுமே பெண் குழந்தைகளாக பிறந்துள்ளது.
அவர் கடந்த 11ம் திகதி தான் தனது 15வது குழந்தையை பிரசவித்துள்ளார். மூன்றரை கிலோ எடையுடன் அந்த குழந்தையும் நலமுடன் இருக்கிறது.
மேலும், 15 பெண் குழந்தைகளில் 6 குழந்தைகள் இறந்துவிட 9 குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளன. அவர்களில் மூத்த பெண்கள் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது.
தற்போது குழந்தையை வளர்க்க முடையாத நிலையில் உள்ளதால், கடைசி குழந்தையை தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைத்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் சீத்தானி பாய் வீட்டுக்கு சென்று விவரங்களை கேட்டறிந்து உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
மேலும், அவரை குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் 15 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
Reviewed by Author
on
June 18, 2015
Rating:

No comments:
Post a Comment