320 கோடி மதிப்பிலான மேகி நூடுல்ஸை அழிக்கும் பணியில் நெஸ்லே நிறுவனம்!
நெஸ்லே நிறுவனம் ரூ.320 கோடி மதிப்புள்ள, 27,420 டன் மேகி நூடுல்ஸை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
இந்த சர்ச்சையால் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
அந்த தடையை தொடர்ந்து, நெஸ்லே நிறுவனம் சந்தையில் இருந்து மேகி நூடுல்ஸை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இதையடுத்து தற்போது, ரூ.320 கோடி மதிப்புள்ள, 27,420 டன் மேகி நூடுல்ஸை அழிக்கும் பணியில் நெஸ்லே நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கடந்த 9ம் திகதியில் இருந்து 13ம் திகதி வரை நெஸ்லே நிறுவனம் வாபஸ் பெறப்பட்ட நூடுல்ஸில் 1 லட்சத்து 69 ஆயிரம் கிலோவை 3 சிமெண்ட் ஆலைகளில் வைத்து பொடியாக்கி அதை எரிபொருளுடன் கலந்து எரித்துவிட்டது.
மேலும், மேகி நூடுல்ஸ் முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டதும் 5 முதல் 6 சிமெண்ட் ஆலைகளில் தினமும் அழிக்கப்படும் என்றும், அவற்றை அழிக்க குறைந்தது 40 நாட்கள் ஆகும் எனவும் நெஸ்லே அறிவித்துள்ளது.
320 கோடி மதிப்பிலான மேகி நூடுல்ஸை அழிக்கும் பணியில் நெஸ்லே நிறுவனம்!
Reviewed by Author
on
June 18, 2015
Rating:

No comments:
Post a Comment