அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்
இந்திய முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கோலோன் தெரிவித்தார்.
இதற்கமைய, நாளை வெள்ளியன்று கலாநிதி அப்துல் கலாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற வருடாந்த ஊடகவியலாளர் மாநாட் டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் அழைப்பின் பிரகாரம், அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக இன்றைய தினம் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வருகை தரவுள்ளார்.
அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்
Reviewed by Author
on
June 25, 2015
Rating:
Reviewed by Author
on
June 25, 2015
Rating:

No comments:
Post a Comment