அண்மைய செய்திகள்

recent
-

யானை சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சுவைமிக்க ’கோப்பி’! போட்டி போட்டு குடிக்கும் மக்கள்


தாய்லாந்தில் உள்ள சொகுசு ஹொட்டல் ஒன்றில் யானை சாணத்திலிருந்து கோப்பி தயாரிக்கப்படுவதுடன், அதன் சுவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளின் எல்லையில் Anantara என்ற பிரமாண்டமான சொகுசு ஹொட்டல் அமைந்துள்ளது.

இந்த ஹொட்டலுக்கு வரும் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இங்கு வழங்கப்படும் சுவை மிக்க ‘Black Ivory Coffee’ என்றால் கொள்ளை பிரியம்.

நாடு முழுவதும் மிகப்பிரபலம் வாய்ந்த இந்த கோப்பியை தயாரிக்கும் முறை மிகவும் வித்தியாசமானதாகும்.

அதாவது, யானைகள் இடும் சாணத்திலிருந்து இந்த கோப்பியை விசேஷமாக தயாரிக்கிறார்கள். சுமார் 9 ஆண்டுகள் போராட்டத்திற்கு இந்த சுவை மிக்க கோப்பியை தயாரித்த Blake Dinkin (44) என்பவர் இது குறித்து விளக்குகிறார்.

மக்களுக்கு வித்தியாசமான தரமிக்க, அதேசமயம் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் கோப்பியை தயாரிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக போராடி வந்தேன்.

முதலில் பூனை இடும் கழிவுகளிலிருந்து கோப்பியை தயார் செய்து குடித்தபோது அதன் சுவை திருப்தி அளிக்கவில்லை. பின்னர், சிங்கம், ஒட்டகச்சிவங்கி உள்ளிட்ட விலங்குகளின் கழிவுகளிலிருந்தும் கோப்பியை தயாரித்தோம்.

ஆனால், அது தாங்கள் எதிர்ப்பார்த்த சுவையுடன் இல்லை என்பதால் அந்த முயற்சியை கை விட்டு விட்டோம்.

பின்னர், யானைகள் இடும் சாணத்திலிருந்து கோப்பி கொட்டைகளை தனியாக பிரித்தெடுத்து வெயிளில் உலர்த்தி அதன் மூலம் கோப்பி தயாரித்தபோது அதன் சுவை மிகவும் பிடித்துப்போனது.

அதாவது யானைகள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், அரிசி வகைகள் மற்றும் கோப்பி கொட்டைகளை அன்றாடம் உண்டு வருகிறது. இவை அனைத்தும் யானையின் வயிற்றிற்குள் சென்று செரிமானத்தில் சேர்க்கிறது.

பிற வகை உணவுகளுடன் இணைந்து குடல் வழியாக செல்வதால், கோப்பி கொட்டைகளுக்கு கூடுதல் சுவை கிடைக்கிறது. மேலும், வயிற்றில் உற்பத்தியாகும் செரிமான திரவம் கோப்பி கொட்டையில் உள்ள கசப்பு தன்மையை முழுவதுமாக நீக்கி விடுகிறது.

யானையின் வயிற்றிற்குள் சுமார் 17 மணி நேரம் நிகழும் இந்த செரிமான முறைக்கு பின்னர், அந்த உணவு சாணமாக வெளியேறுகிறது.

இந்த சாணத்தை சேகரித்து அவற்றிலிருந்து கொட்டைகளை மட்டும் தனியாக பிரிப்பதற்கு என ஒரு குழு உள்ளது. அவர்கள் அவற்றை தனியாக பிரித்து வெயிலில் போட்டு உலர்த்தி தரமான காபிக்கு தயார் படுத்துவார்கள்.

பின்னர், 19ம் நூற்றாண்டின் பயன்படுத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டு கோப்பி இயந்திரத்தின் உதவியுடன் Black Ivory Coffee தயாரிக்கப்படுகிறது.

இந்த ஹொட்டலுக்கு வரும் பெரும்பாலான மக்களின் முதல் தெரிவாக இந்த கோப்பி அமைந்துள்ளது தங்கள் உழைப்பிற்கு கிடைத்துள்ள பலன் என Blake Dinkin பெருமை பட கூறியுள்ளார்.

ஒரு கோப்பை கோப்பி சுமார் 8.50 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ அளவில் வாங்க வேண்டும் என்றால், 1,217 பவுண்டுகள் செலுத்த வேண்டும்.

தற்போது தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் நகரில் பிரபலம் வாய்ந்துள்ள இந்த கோப்பி, இன்னும் சில வருடங்களில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளதாக Blake Dinkin தெரிவித்துள்ளார்.





யானை சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சுவைமிக்க ’கோப்பி’! போட்டி போட்டு குடிக்கும் மக்கள் Reviewed by Author on June 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.