மன்னார் மாவட்ட ஆணையாளராக திரு ப.ஞானராஜ் அவர்கள் நியமனம்
மன்னார் கல்வி திணைக்களத்தில் உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் திரு ப.ஞானராஜ் அவர்கள் இலங்கை சாரணர் சங்கத்தின் மன்னார் மாவட்ட ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய ஆணையாளரால் மாவட்ட ஆணையாளராக நியமிக்கப்பட்ட இவர் 18.03.2015ல் இருந்து நியமிக்கப்பட்டாலும் 01.06.2015 இலிருந்து இவர் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மாவட்ட ஆணையாளர் பதவியானது 5 வருடங்கள் கால எல்லையைக் கொண்டது. அத்துடன் இப்பதவிக்குரிய அங்கீகாரமனது இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் 1999ம் ஆண்டு சாரணர் PHASE என்ற பயிற்சியை பெற்று சாரண ஆசிரியராக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் 1999 முதல் 2009 வரை சேவையாற்றினார்.
விளையாட்டுத்துறையில் மன்னார் மாவட்டத்திற்கு தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் பெருமை தேடித்தந்த இவர் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இப்பதவியிலும் மன்னார் மாவட்டத்தை மிளிரச்செய்ய ஆசித்து வாழ்த்துகின்றோம்.
மன்னார் மாவட்ட ஆணையாளராக திரு ப.ஞானராஜ் அவர்கள் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
June 13, 2015
Rating:

No comments:
Post a Comment