இலங்கையின் தேசிய மலரை தவறின்றி அடையாளப்படுத்த அமைச்சரவை அனுமதி
இலங்கை தேசிய மலரான நீலோத்பலம் மலரை தவறின்றி அடையாளப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சிங்களத்தில் மனேல் எனவும் தமிழில் நிலோத்பலம் எனவும் ஆங்கிலத்தில் புளு வோட்டர் லில்லி எனவும் குறிப்பிடப்பட வேண்டும்.
அத்துடன் தேசிய மலரின் சரியான படத்தை வெளியிட வேண்டும் என்பதுடன் அதன் விஞ்ஞான பெயரான Nymphaea stellata எனவும் குறிப்பிட வேண்டும்.
நாட்டின் தேசிய மலரின் பெயர் அதன் வடிவம் குறித்து போதுமான பிரச்சாரத்தை பெற்றுக்கொடுப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.
பொது மக்கள் முன்வைத்த யோசனையை கவனத்தில் கொண்டு நிபுணர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு வழங்கிய பரிந்துரைக்கு அமைய நீலோத்பலம் இலங்கை தேசிய மலராக 1986 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய மலரை தவறின்றி அடையாளப்படுத்த அமைச்சரவை அனுமதி
Reviewed by NEWMANNAR
on
June 11, 2015
Rating:

No comments:
Post a Comment