அண்மைய செய்திகள்

recent
-

தொலைக்காட்சிகளிலிருந்து குழந்தைகளை மீட்போம்!


குழந்தைகள் நர்சரிப் பள்ளி செல்லும் முன் சுமார் 3000 மணிநேரம் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. இது கல்லூரியில் ஓர் பட்டம் பெற படிப்பதற்காக செலவிடும் நேரத்திற்கு சமமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நம் நாட்டில் வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியும் கம்ப்யூட்டரும் இருக் கும் தற்போதைய சூழ்நிலையில், குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க விடாமல், கம்ப்யூட்டரில் விளையாடாமல் தடுப்பது என்பது இய லாதது. குழந்தைகள் அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதா னாலும், கம்ப்யூட்டரில் விளையாடுவதானாலும் பல தீய விளைவுகள் உண்டாகின்றன.

அவை உடல் பருமன், சோம்பேறித்தனம், புதுவித சிந்தனை வளர்ச்சி யடையாமை, பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன் குறைவு, அதனால் குறைவான நண்பர்களையே பெற்றிருப்பது, கண் பார்வை குறைபாடு, படிப்பில் ஆர்வம் இல்லாமை.

இவைகளால்தான் பிற்காலத்தில் இந்த குழந்தைகளால் யதார்த்த வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல் குழம்பித் தவிக்கின்றனர். அதே சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முற்றிலும் பார்க்காத குழந்தை களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும்.



வகுப்பிலும், பிற இடங்களிலும் தன் வயதையொத்த குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சில கதாபாத்திரங்களைப் பற்றியோ கதைகளைப் பற்றியோ பேசிக்கொண்டிருக்கும்போது தொலைக்காட்சி பார்க்காத குழந்தைகள் எதுவும் புரியாமல், குழந்தைகளின் தற்போதைய பேஷன் என்னெவென்று தெரியா மலும், பயன்படுத்தும் பொருட்கள் என்னவென்று தெரியாமலும் தவிப்பர்.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், புதிய சொற்களை கற்பது. மொழி வளர்ச்சி, புதிய நவீன உடையணிதல், பிறரிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது ஆகியன சிறப்பாக இருக்கும். இந்த நன்மைகள் குழந் தைகள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

அவ்வாறு நிகழ்ச்சிகளை தினமும் குறிப்பிட்ட நேரம், சுய நேரக் கட் டுப்பாடு செய்து தொலைக்காட்சிகளை பார்க்கச் செய்வது குழந்தை களின் அறிவு வளர்ச்சிக்கு பெற்றோர் செய்யும் உதவியாக அமை யும். எப்போதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பது, கம்ப்யூட்டரில் விளையாடிக் கொண்டிருப்பது தவறு.

தொலைக்காட்சியே பார்க்காமல் இருப்பதும் தவறு தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளை மட்டும் குழந்தைகளை பார்க்கச் செய்வது அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும்.

பிள்ளைகள் விரும்புகிறார்கள் என்று சொல்லி அவர்களின் அறிவை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச் சிகளை பார்க்கவிடுவது பெற்றோர்கள் எதிர்காலத்தில் அவர்கள் நிலை குறித்து கவலைப்படக் காரணமாகி விடும்... ஜாக்கிரதை!
தொலைக்காட்சிகளிலிருந்து குழந்தைகளை மீட்போம்! Reviewed by NEWMANNAR on June 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.