அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் பகுதியில் டைனமெற் வெடி பொருட்களுடன் 4 பேர் கைது.-Photos



மன்னார் சௌத்பார் கடற்கரைப்பகுதியில் வைத்து சுமார் 190 டெட்டனேட்டர்(டைனமெற்) வெடி பொருள் மற்றும் பற்றவைக்கும் திறி ஆகியவற்றை மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு,குறித்த வெடி பொருட்களுடன் தொடர்புடைய 4 நபர்களையும் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்றிகோ வின் கட்டளையின் பிரகாரம் மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி.ரத்னமலல வின் தலைமையில் சென்ற 07 பேர் கொண்டு பொலிஸ் குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை சௌத்தபார் கடற்கரை பகுதியில் வைத்திருந்த 190 டெட்டனேட்டர்(டைனமெற்) குச்சிகள் மற்றும் பற்றவைக்கும் திறி ஆகியவற்றை மீட்டுள்ளதோடு பயண்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த வெடி பொருட்களுடன் தொடர்புடைய 4 நபர்களை கைது செய்துள்ளதோடு அதில் மூவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றையவர் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.

விசாரனைகளின் பின் குறித்த 4 சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.









மன்னார் சௌத்பார் பகுதியில் டைனமெற் வெடி பொருட்களுடன் 4 பேர் கைது.-Photos Reviewed by NEWMANNAR on June 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.