நியூசிலாந்து சென்ற ஈழத்தமிழ் அகதிகள் கடலில் தத்தளிப்பு: இந்திய அரசு உதவுமாறு திருமாவளவன் கோரிக்கை
நியூசிலாந்து நாட்டில் தஞ்சம் கோரி கடல் வழியாகப் படகில் பயணம் செய்த 54 ஈழத் தமிழர்கள் உட்பட 65 பேரும் அவுஸ்திரேலிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு அவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்டு நடுக்கடலில் தத்தளிக்க விடப்பட்டுள்ளனர்.
கடலில் குதித்து நீந்தி தற்போது திமோர் தீவுக்கு உட்பட்ட குப்பாங் என்ற இடத்தில் அவர்கள் அனாதைகளாக நிற்கின்றனர். நியூசிலாந்து நாட்டில் அகதிகளாகத் தஞ்சம் புகுவதே அவர்களது கோரிக்கை எனத் தெரிகிறது.
அவர்களுக்கு இந்திய அரசு தலையிட்டு உதவவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கடந்த இரண்டு மாதங்களாக இந்தோனேசியாவில் அகதிகளாகத் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் அங்கிருந்துதான் நியூசிலாந்துக்குச் சென்றுள்ளனர்.
தற்போது குப்பாங்கில் ஆதரவு ஏதுமின்றி உயிருக்குப் போராடி வரும் ஈழத் தமிழர்கள் 54 பேரில் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர்.
எனவே, அவர்களது துயரநிலையை உணர்ந்து இந்திய அரசு இதில் தலையிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழர் சிக்கலுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பது ஒன்றே இத்தகைய அகதிகளின் பிரச்சினைக்கு முடிவுகட்டும்.
இந்திய அரசு இனியும் மெத்தனம் காட்டாமல் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
நியூசிலாந்து சென்ற ஈழத்தமிழ் அகதிகள் கடலில் தத்தளிப்பு: இந்திய அரசு உதவுமாறு திருமாவளவன் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
June 08, 2015
Rating:

No comments:
Post a Comment