வவுனியா வைத்தியசாலையில் 25 இன்புளுவென்சா நோயாளிகள்

இன்புளுவென்சா என்ற பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 25 நோயாளர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி சுதர்ஷினி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
25 வயதான கர்ப்பிணி தாய் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டிருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
கர்ப்பிணி தாய்மார், இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தைகள், நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த காய்ச்சல் மரணத்தை ஏற்படுத்தவல்லது எனவும் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனால், நீண்டநாட்களாக நீடிக்கும் இருமல், தடிமன், தலைவலி மற்றும் கடும் காய்ச்சல் அறிகுறிகள் இருக்குமாயின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால், நோயை குணமாக்க முடியும் எனவும் வைத்திய அதிகாரி சுதர்ஷினி விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் 25 இன்புளுவென்சா நோயாளிகள்
Reviewed by Author
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment