அண்மைய செய்திகள்

recent
-

இறந்து போன தாயாரின் உடல் அருகே அழுது தவித்த குழந்தை: 4 நாட்களுக்கு பிறகு மீட்ட பொலிசார்


பிரித்தானியாவில் உள்ள வீடு ஒன்றில் இறந்த போன தனது தாயாரின் உடல் அருகே சுமார் 4 நாட்களாக அழுது தவித்த குழந்தையை பொலிசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் உள்ள Balbeggie என்ற சிறிய நகரத்தில் Lydia MacDonald (26) என்ற பெண் Mason Martin என்ற 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது கணவர் இறந்து விட்டதால், அந்த வீட்டில் அவர்கள் இருவரும் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்த லிடியா, அவர்களுடன் மதுபானம் அருந்தி கொண்டாடியுள்ளனர். சிறிது நேரத்தில் நண்பர்கள் அங்கிருந்த கிளம்பியுள்ளனர்.

அப்போது, லிடியாவிற்கு திடீரென மூச்சு திணறலுடன் மயக்கம் ஏற்பட அப்படியே கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

தாயார் இறந்ததை அறியாத அந்த குழந்தை ‘என்னுடைய அம்மாவை யாராவது வந்து எழுப்புங்கள்’ என பூட்டிய கதவு வழியாக கத்தியுள்ளான்.

ஆனால், உதவிக்கு யாரும் வராததால், அவன் தனது தாயாரின் சடலத்திற்கு அருகே அமர்ந்தவாறு அழுது தவித்துள்ளான்.

இந்நிலையில், பார்ட்டிக்கு வந்து சென்ற லிடியாவின் நண்பர்கள் அவரது வீட்டு தொலைப்பேசியில் அழைத்துள்ளனர்.

வீட்டிலிருந்து எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர். வீட்டிற்கு வந்த பொலிசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.

தாயாரின் இறந்த உடலை அணைத்தவாறு அந்த குழந்தை சோர்வாக காணப்பட்டவுடன் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாயாரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்து, சிகிச்சை பெற்ற குழந்தையை தாயாரின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

லிடியாவின் மரணம் உடல் நலக்காரணமாக நிகழ்ந்ததா அல்லது அது ஒரு திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இறந்து போன தாயாரின் உடல் அருகே அழுது தவித்த குழந்தை: 4 நாட்களுக்கு பிறகு மீட்ட பொலிசார் Reviewed by Author on June 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.