சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் திருமணம்
சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரமும் மொடல் அழகியுமான சோபியா ஹெல்க்விஸ்ஸுடன் ஸ்டொக்ஹோமிலுள்ள அரண்மனை தேவாலயத்தில் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார்.
சோபியா (30 வயது) தொண்டு ஸ்தாபனமொன்றை உருவாக்குவதற்கு உதவுவதற்கு முன்னர் மேலாடையின்றித் தோன்றும் மொடல் அழகியாகவும் யோகா ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கார்ல் பிலிப் (36 வயது) அந்நாட்டின் முடிக்குரிய வாரிசுகள் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.திருமணத்திற்கு பின்னர் மேற்படி புதுமணத் தம்பதியினர் குதிரை வண்டியில் நகரினூடாக ஊர்வலமாக சென்றனர். இந்த திருமணத்தையொட்டி 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன.
மேலும் இந்தத் திருமணத்தில் ஜப்பானிய இளவரசி தகமடோ மற்றும் பிரித்தானிய இளவரசர் எட்வார்ட் உள்ளடங்கலான அரச குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 550 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். சுவீடன் அரச குடும்பத்தின் பிரபலம் வீழ்ச்சியடைந்து வருவதாக கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்ற போதும், பெருந்தொகையான மக்கள் ஊர்வலமாக சென்ற அரச குடும்ப புதுமணத் தம்பதியைக் காண வீதிகளில் கூடியிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இளவரசர் கார்ல் பிலிப்பும் சோபியாவும் 2010 ஆம் ஆண்டில் உணவகமொன்றில் முதன் முதலாக சந்தித்தனர். அந்த சந்திப்பு பின்னர் காதலாக மலர்ந்தது.
சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் திருமணம்
Reviewed by Author
on
June 15, 2015
Rating:

No comments:
Post a Comment