மன்னாரில் மகத்தான சேவையாற்றும் துரையம்மா அன்பகம் மேலும் இரண்டு கிராமங்களில் இருந்து 20 பிள்ளைகளை கல்விக்கரத்தால் அணைத்துக்கொண்ட-Photos
மன்னார் மண்ணில் கல்விக்காக மகத்தான சேவை செய்து வரும் துரையம்மா அன்பகம் தனது சேவையின் எட்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு தனது கல்விச்சேவையின் தாற்பரியத்தை உணர்ந்தவர்களாய் தமது சேவையினை விரிவு படுத்தும் திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தின் அதிசயங்கள் இரண்டை உள்ளடக்கிய கிராமமான குஞ்சுக்குளத்தில் குஞ்சுக்குளத்தில் இருந்து பத்துப்பிள்ளைகளையும் அடுத்த கிராமமான பெரிய முறிப்பு கிராமத்தில் இருந்தும் பத்து பிள்ளைகளை தெரிவு செய்து அவர்களின் ஆரம்பக்கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை அவர்களுக்கு கல்விக்கான தேவைகள் அனைத்தினையும் நிறைவேற்றி அவர்களின் சூபீட்சமான வாழ்விற்கு கல்வியால் ஒளியூட்டுகிறார்கள்.
இவர்களின் சேவை விரிவடைந்து கொண்டே செல்வது பாராட்டுக்ககுரியது.
இரண்டு கிராமத்திற்கும் கிராம அலுவலராக பணியாற்றும் ஊ.பெனடிற் அவர்கள் தனது உரையில் எமது இரண்டு கிராமத்தில் இருந்தும் 20 பிள்ளைகளை கல்விக்காக தத்தெடுக்க வந்திருக்கும் துரையம்மா அன்பகத்தின் பணியினை பாராட்டுவதோடு தற்காலத்தில் இச்சேவைகளின் தாற்பரியம் மிகவும் அவசியமானதும் அனைத்து மாணவமாணவிகளுக்கம் மிகவும் தேவையானதும் ஒன்று அதுவே சேவையாக செய்து வரும் துரையம்மா அன்பகத்தின் சேவைகள் தொடரட்டும் கல்வி செல்வம் வளரட்டும்.
மன்னாரில் மகத்தான சேவையாற்றும் துரையம்மா அன்பகம் மேலும் இரண்டு கிராமங்களில் இருந்து 20 பிள்ளைகளை கல்விக்கரத்தால் அணைத்துக்கொண்ட-Photos
Reviewed by NEWMANNAR
on
June 16, 2015
Rating:
No comments:
Post a Comment