அண்மைய செய்திகள்

recent
-

புளுடோ என்ற சிறய கிரகம் அடுத்த வாரத்துடன் மறைந்துவிடும்!

இறுதியாக எடுக்கப்பட்ட புளுட்டோ கிரகத்தின் புகைப்படங்கள் மூலம் விஞ்ஞானிகளுக்கு பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விஞ்ஞானிகளின் ஆய்விற்கு அமைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிக குள்ளமான கிரகத்தை அடுத்தவாரம் இடம்பெறும் சுழற்சியின் பின்னர் காணமுடியாது என நம்பப்படுகின்றது.

புளுட்டோவில் காணப்படும் புள்ளிகள், சுழற்சியின் போது மறைந்து விடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும், தற்போதைய நிகழ்வுகள் மூலம் புளுட்டோவின் இருண்ட பகுதி குறித்து பல தகவல்களை பெறமுடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புளுட்டோவில் படிவமாக அதிக அளவில் உள்ள நைட்ரஜன் வாயு மற்றும் பனி என்பன மறையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் புளுட்டோவின் நான்கு கரும்புள்ளிகளை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.

புளுட்டோ கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தகவல்கள் விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகுந்த பலனை கொடுப்பவை என தெரிவிக்கப்பட்டுள்ளன.
புளுடோ என்ற சிறய கிரகம் அடுத்த வாரத்துடன் மறைந்துவிடும்! Reviewed by NEWMANNAR on July 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.