வடமாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஆளுனர் முட்டுக்கட்டை
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்தபோதிலும், வடக்கு ஆளுனர் பாலிஹக்கார முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அனுமதி மறுத்து வந்தது.
எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அண்மையில் மாகாண முதலமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, வடக்கு மாகாணசபை முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க அனுமதி அளிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஆளுனருடன் கலந்துரையாடி அவரது கருத்தை அறியும்படி, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கேட்டிருந்தார்.
இதையடுத்து, வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவை அவர் சந்தித்துப் பேசினார்.
இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆளுநர் பதிலளித்துள்ளார்.
இந்த தகவலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் லண்டனில் வெளியிட்டுள்ளார்
வடமாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஆளுனர் முட்டுக்கட்டை
Reviewed by Author
on
July 21, 2015
Rating:

No comments:
Post a Comment