அண்மைய செய்திகள்

recent
-

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மைத்திரி



மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் விஜயமொன்றை இன்று மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதனை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி அங்கு விஜயம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளமையால், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் தெரிவித்தனர். 

 இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவித்த போதிலும், அவசர சிகிச்சைப் பிரிவை வழமை நிலைக்கு கொண்டுவரவில்லை எனவும் அவர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த வருடத்தின் ஜூலை மாதம் வரை 52 நோயாளர்களுக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப்பிரிவை வழமை நிலைக்கு கொண்டு வர உடனடியாக தலையீடு செய்யுமாறும், அதன் நடவடிக்கைகள் தொடர்பில் நாளாந்தம் கண்காணிக்குமாறும் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மைத்திரி Reviewed by Author on July 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.