இரவு வேலையில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய் அபாயம்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இரவு நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இதற்காக இரவு வேலை பார்க்கும் 100 பேரை தேர்ந்தெடுத்து, 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சீறுநீரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹோமோன்கள் ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கையில் காலை 6 மணி முதல் 10 வரை சுரக்கும் இந்த ஹோர்மோன்கள், இரவு வேலை பார்ப்பவர்களுக்கு இரவு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரவு வேலை பார்ப்பவர்களுக்கு மார்பக அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்கள் தங்களால் இரவு நேர வேலைக்கு வர இயலாது என கூறமுடியாத நிலையில் உள்ளனர். அதேசமயம் இலாபத்தை மட்டும் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைப் பற்றி கவலைப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. மொத்தத்தில் நவீன மனிதர்களின் வாழ்கையானது கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாக மாறிவிட்டது.
இரவு வேலையில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய் அபாயம்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:

No comments:
Post a Comment