இந்து மாமன்றம் நடத்தும் இந்து ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 31இல்
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் இந்து ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 31 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி வரை மூன்று நாள் அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு நல்லூர் துர்க்கா தேவி மணி மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் க.நீலகண்டன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் சி.பத்மநாதனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் "இந்து ஒளி" என்னும் மாநாட்டு சிறப்பு இதழ் வெளியிடப்படவுள்ளதுடன் சிறப்பு சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன.
இந்து மாமன்றம் நடத்தும் இந்து ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 31இல்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:

No comments:
Post a Comment