உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை ஒரு நிலைப்படுத்தும் வகையில் விசேட தியானம்.-Photos
மன்னார் முருங்கன் கோட்டப்பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் உயர் தர பிரிவில் கல்வி கற்று எதிர் வரும் மாதம் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை ஒரு நிலைப்படுத்தும் வகையில் மன்னார் முருங்கன் மறைக்கோட்ட குருக்கள் ஏற்பாடு செய்த விசேட தியானம் முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) காலை இடம் பெற்றது.
அருட்தந்தை மாக்கஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த தியான நிகழ்வில் மறைக்கோட்ட குருக்கள் கலந்து கொண்டதோடு உயர் தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டதோடு விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை ஒரு நிலைப்படுத்தும் வகையில் விசேட தியானம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 27, 2015
Rating:
No comments:
Post a Comment