அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாடு குறித்து மன்னார் பிரதேச மக்கள் முதலமைச்சருக்கு கடிதம்.


கௌரவ முதலமைச்சர்
வடக்கு மாகாணம்

மன்னார் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாடு

மேற்படி விடயம் தொடர்பா மன்னார் நகர பிரதேச செயலாரினால் இப்பிரதேச செலயகப்பரிவில் வசிக்கும் பொதுமக்களாகிய நாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். மக்கள் தமது பிரச்சனைகளை கதைக்க முடியவில்லை நொந்து தேவை கருதி செல்லும் எமக்கு மீண்டும் மீண்டும் வேதனையை ஏற்படுத்துகின்றார். அவர் மக்களுக்குசிறப்பான சேவையை செய்யாத அதே வேளை மக்களுக்கு இடையூறாகவே உள்ளார். அவரின் செயற்பாட்டினை தங்களின் மேலான கவனத்திற்குத் தருகின்றோம்.

பொதுமக்கள் தமது நிவாரணங்கள் தொடர்பாக அல்லது சமுர்த்தி விடயம், காணி விடயம் தொடர்பாக செல்லும் போதும் தான் கதைக்காது எம்மை உதாசீனப்படுத்தி போய்   புN யுழு வை சந்தியும் என்றும் அல்லது போய் வசந்தனை சந்தியும் என்றும் எம்மை அனுப்பி விடுகின்றார். நாங்கள் அவர்களிடம் போனால் அது செய்ய இயலாது என்று ஒரு வசனத்தில் முடித்து விடுகின்றனர்.எம்மிடம் பிரச்சினைகளையோ தேவைகளையோ முழுமையாக கேட்டு அறிவதில்லை மன்னார் பிரதேச யெலகத்தின் அதிகாரம் பிரதேச செயலாளரிடம் உள்ளதா அல்லது புN யுழு விடம் உள்ளதா எமக்கு புரியவில்லை.


யுத்தம் முடிவுற்ற பின்னர் மன்னாரில் அரச காணிகள் அனைத்தும் ஏற்கனவே காணியுள்ள வசதி படைத்த, உத்தியோகங்களில் உள்ள அரசியல் செல்வாக்குள்ள ஒரு சிலருக்கே வழங்கப்படுகின்றன. இடம் பெயர்ந்தும், காணி அற்றும் இருக்கும் எமக்கோ வழியில்லை காணி அற்ற ஏழைக்குடும்பங்கள் காணி கேட்டால் இல்லை என்று சொல்லி விடுகின்றார்கள் பிரதேச செயலாளரும், காணி அதிகாரி வசந்தனும். றிசாட்டின் ஆட்களுக் மட்டும் தான் வழங்குவார்கள் இதில் பணம் கொடுக்கும் முஸ்லிம்களுக்குத்தான் அதிகமாக காணி வழங்கியுள்ளார்கள் இதை 2009 ம் ஆண்டுக்குப்பின்னர் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரங்களையும், பதிவுகளையும் பார்வையிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்

சமுர்த்தி:- மேலும் அரசியல் செல்வாக்குள்ள சிலரை சமுர்த்தியில் இணைத்து வைத்துக்கொண்டு அவர்களை வைத்து பணம் அறவீடு செய்வது மற்றும் வசதி படைத்தவர்களுக்கும், அரசியல்வாதிகளால் அனுப்பி வைக்கப்படுகின்றவர்களுக்கும் தான் சமுர்த்தி வழங்கப்படுகின்றது. ஏழைகள், உண்மையில் வறுமைப்பட்டவர்கள், உதவி தேவைப்பட்டவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு கிடைப்பதில்லை இதற்குக்காரணம் றிசாட்டின் அரசியல் செல்வாக்கினால் வந்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது சொந்தக்கிராமத்திற்கு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டமையினால் றிசாட்டுக்கு ஆதரவழிக்காதவர்கள், ஏனைய கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்களால் பழிவாங்கப்படுகின்றார்கள் எனவே சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தகுதிகள் மீள் பரிசீலனை செய்யப்படுவதுடன் அவர்கள் வேறு வேறு கிராமங்களுக்கு நியமனம் செய்யப்பட வேண்டும்.

வீட்டுத்திட்டம்:- மன்னாரில் ஓரிரு கிராமங்கள் மட்டும் வீட்டுத்திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன அதில் எந்தக்கிராமத்தில் எத்தனை பேருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளன என்பதும், என்ன அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதும் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஏனெனில் வீட்டுத்திட்டம் பொருத்தமற்ற பலருக்கு வழங்க பிரதேச செயலாளரும், சில அபிவிருத்தி உத்தியோகத்தர்களுகம் அனுமதி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக அரசாங்க அதிபருடன் பேசிய போதும் அதனால் பலன் கிடைக்கவில்லை.மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட விபரம் முழுமையாக வெளிடப்பட வேண்டும் அப்போது தெரியும் அரசாங்கம் யாருக்க வீட்டுத்திட்டம வழங்கியிருக்கின்றது என்று.

மண்அகழ்வு:- மன்னார் தீவுப்பகுதியில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படக்கூடாது எனவும் மணல் மேடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கடந்த 27.04.2015ம் திகதி நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட போதும் மன்னார் பிரதேச செயலாளர் பெருந்தொகைப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு இங்குள்ளவர்களுக்கும், ஒரு பெரும்பான்மை இனத்தை சார்ந்தவருக்கும் தொடர்ந்தும் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கி வருகின்றார். 

அரசாங்க அதிபர், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் போன்ற பல்வேறு திணைக்கள அதிகாரிகளைக் கொண்ட மாவட்ட சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழுக்கூட்டத்தீர்மானத்தையும் மீறி பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரம் வழங்குகின்றார் என்றால் இந்தக்குழுக்கூட்டம் இனிமேல் தேவையில்லை என்பதுடன் இவ்விடயத்தில் தாங்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம். இல்லாவிடின் மன்னார் தீவு இன்னும் குறுகிய காலத்தில் இல்லாது போகும் வாய்ப்பு உள்ளது அந்த காலத்தில் பிரதேச செயலாளர் தனது ஊரில் இருப்பார்.


காணி:. மன்னார் பிரதேச செயலகப்பிரிவில் அரச காணிகள் மிகக்குறைவாக இருந்த போதும் எந்த கூட்டமும் இன்றி எவரதும் ஆலோசனைகளும் இன்றி அரச காணிகளை தன்னிச்சையாக காணி உத்தியோகத்தர் வசந்தனின் ஆலோசனையுடன் பல லட்சம் ரூபாய்களை வாங்கிகொண்டு வழங்கி வருகின்றார். றிசாட்பதியுதினின் ஆட்கள் என்று சொல்லிவருபவர்களுக்கு உடனடியாக காணி வழங்கப்படுகின்றது. இதைவிட மாந்தை பிரதேசத்தில் மாந்தையின் பூர்வீக குடிகள் காணி இன்றி இருக்க கூடியதாக வெளிமாவட்டங்களில் இருந்தும் காணி உள்ளவர்களுக்கும் பிரதேச செயலாளரினாலும் காணி உத்தியோகத்தரினாலும் கிராம அலுவலகரினாலும் காணிகள் வழங்கப்படுகின்றது. இவர்கள் மாந்தை பகுதியில் சைவ குடீயேற்றத்தை மட்டும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றமையானது மிகவும் கண்டிக்க தக்க விடயமாகும். அதை விட மாந்தை பகுதியின் கிராம அலுவலகர் செல்வகுமார் தனக்கும் தனது மாமிக்கும் தனது மச்சாளுக்கும் காணிப்பதிவுகளை மேற்கொண்டுள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது. பெயர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய அனைத்து விடயங்களையும் தங்களின் மேலான கவனத்திற்கு முன் வைப்பதுடன் மன்னார் பிரதேச செயலாளரினால் எமது பிரதேசத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தீர்ப்பதற்கு எமது பிரதேச மக்கள்மீது தாங்கள் கருணை காட்ட வேண்மென இதன் மூலம் வேண்டி நிற்கின்றோம்.

பிரதி:- கௌரவ அமைச்சர் – பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு
கௌரவ ஆளுனர் - வடக்கு மாகாணம்
கௌரவ அமைச்சர் – சுற்றாடல், காணி அமைச்சு, வட மாகாணம்
கௌரவ அமைச்சர் – கிராம அபிவிருத்தி அமைச்சு வட மாகாணம்
மத்திய சுற்றாடல் அதிகார சபை வட மாகாணம்
அரசாங்க அதிபர், மன்னார்
கௌரவ செல்வம் அடைக்கலநாதன் பா. உறுப்பினர்- வன்னி
கௌரவ வினோநோகராதலிங்கம் பா உறுப்பினர் வன்னி
கௌரவ சிவசக்கி ஆனந்தன் பா.உறுப்பினர் வன்னி
மன்னார் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாடு குறித்து மன்னார் பிரதேச மக்கள் முதலமைச்சருக்கு கடிதம். Reviewed by NEWMANNAR on July 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.