பிராந்திய வலயத்தில் போதைப்பொருளை இல்லாதொழிக்க இணைந்து செயற்படுவோம்! ஜனாதிபதி மைத்திரி,,,
பிராந்திய வலயத்தில் போதைப்பொருட்களை இல்லாதொழிக்க இணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெற்காசிய வலயத்தின் அனைத்து அரச தலைவர்களும் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் போதைப்பொருளை இல்லாதொழித்தல், கிரமமான உள்நாட்டு உணவு உற்பத்திகளை ஆரம்பித்தல், சுற்றாடல் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியனவே எனது ஆட்சிக் காலத்தின் நோக்கங்களாகும்.
இந்த இலக்குகளை அடைவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் 50வது சுதந்திர தின நிகழ்வுகளில் விசேட அதிதியாக கலந்து கொள்ளும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா அப்துல்லாவை இன்று சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பிராந்திய வலயத்தில் போதைப்பொருளை இல்லாதொழிக்க இணைந்து செயற்படுவோம்! ஜனாதிபதி மைத்திரி,,,
Reviewed by Author
on
July 26, 2015
Rating:

No comments:
Post a Comment