22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பாலம்
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கான போக்குவரத்தினை மேம்படுத்த 22 ஆயிரம் ரூபா கோடி ரூபாய் இந்திய மதிப்பில் திட்டப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு வாகனப் போக்குவரத்தினை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழிப் பாலங்களும், கடலுக்கு அடியிலான சுரங்கங்களும் அமைப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இராமேஸ்வரத்தின் தனுஸ்கோடியிலிருந்து இலங்கைக்கு பாதை அமைப்பதன் மூலம் சார்க் நாடுகள் அனைத்தும் சாலை மார்க்கமாக இணைப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
இத்திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவியை வழங்கத் தயாராக உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
22 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பாலம்
Reviewed by NEWMANNAR
on
July 11, 2015
Rating:

No comments:
Post a Comment