கடாஃபியின் மகன் சயிஃப் அல் இஸ்லாமுக்கு மரண தண்டனை
லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாஃபியின் மகன் சயிஃப் அல் இஸ்லாமுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
லிபியாவின் 2011 புரட்சியுடன் சம்பந்தப்பட்ட போர் குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புரட்சிக் காலத்தில் போராட்டங்களை நசுக்க முயன்றதாக கேர்ணல் கடாஃபியின் நெருங்கிய சகாக்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது சயிஃப் அல் இஸ்லாம் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை, வீடியோ தொடர்பு மூலம் அவர் சாட்சியமளித்தார்.
முன்னாள் கிளர்ச்சிக்குழு ஒன்றினால் ஷிந்தான் நகரில் சயிஃப் அல் இஸ்லாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கடாஃபியின் மகன் சயிஃப் அல் இஸ்லாமுக்கு மரண தண்டனை
Reviewed by NEWMANNAR
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment