குழந்தையின் உயிரை காத்து தனது உயிரை நீத்த தாய்: சீனாவில் பரிதாப சம்பவம்,,,
நகரும் படிக்கட்டு ஒன்று இடிந்து வீழ்ந்தவுடன் தனது குழந்தையின் உயிரை காப்பாற்றி உயிரை தியாகம் செய்த தாய் ஒருவரின் செயல் சீனாவில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் மேல் மாடிக்கும் செல்லும் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெண் ஒருவர் தனது சிறுவயது மகனுடன் எஸ்கலேட்டரில் மேலே ஏறிச் செல்லும் போது படிக்கட்டின் இறுதிப் பகுதி திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன் போது குறித்த பெண் எஸ்கலேட்டர் இயந்திரத்துக்குள் சிக்கி கொண்டார். எனினும் உடனடியாக மகனை காப்பாற்ற தூக்கி வீசி விட்டார் . ஆனால் அவர் எஸ்கலேட்டர் இயந்திரத்தில் சிக்கி உயிர் இழந்தார்.
குறித்தப் பெண்ணை காப்பாற்ற நிறுவன ஊழியர்கள் கடுமையாக முயற்சி செய்த போதும் காபாற்ற முடிய வில்லை.
அவரது உடல் சுமார் 3 மணிநேரத்துக்கு பின்னர் இயந்திரத்துக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் உயிரை காத்து தனது உயிரை நீத்த தாய்: சீனாவில் பரிதாப சம்பவம்,,,
Reviewed by Author
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment