மன்னார் நோக்கி சென்ற வான் விபத்து ஒருவர் உயிரிழப்பு
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் நோக்கி சென்ற வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த வான் சாரதி உட்பட மூன்று பேர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதி செட்டிக்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மன்னார் நோக்கி சென்ற வான் விபத்து ஒருவர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
July 11, 2015
Rating:

No comments:
Post a Comment