அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் எரிவாயு அகழ்வுப் பணிகளுக்கான விலைமனு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் கோரப்படும்


மன்னார் கடற்படுகையில் எரிவாயு அகழ்வுப் பணிகளுக்கான விலைமனு கோரலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.

ஆகஸ்ட் மாதத்தின் பின்னரே விலைமனு கோரப்படும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மன்னாரிலிருந்து தென் பகுதி வரையான கடற்படுகையில் இயற்கை எரிவாயு காணப்படுகின்றமை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கடற்படுகையிலிருந்து எரிவாயு பெற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் கடன் சுமையற்ற சிறந்த பொருளாதார வளரச்சியுடைய நாடாக இலங்கை மாற்றமடையும் என்றும் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
மன்னாரில் எரிவாயு அகழ்வுப் பணிகளுக்கான விலைமனு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் கோரப்படும் Reviewed by NEWMANNAR on July 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.